பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் ஜி.கே.மணி வாழ்த்து!

 
gk mani

பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள முன்னாள் துணை குடியரசு தலைவர், நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஜி.கே.மணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த் ஆகியோருக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 


இந்திய நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது பெற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த நண்பர் விஜயகாந்த், தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்ம விபூஷன் விருது பெற்ற கலைஞர்கள் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமிய கலையான கும்மி ஆட்ட பயிற்சியாளர் பத்தரப்பன், சின்னப்பா, இயற்கை விவசாயி செல்லம்மாள் உள்ளிட்ட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.