காதலன் ஆசைப்பட்டான் என்பதற்காக காதலி செய்த கேவலமான செயல்..! தோழியை வீடியோ எடுத்து...
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் ஒர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கல்லூரி மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த மாணவி மற்றொரு மாணவி குளிப்பதை செல்போனில் வளைத்து வளைத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி செல்போனில் படம் பிடித்த மாணவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் வாய் திறக்காமல் மவுனமாக இருந்துள்ளார். பின்னர் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது அந்த வீடியோவை தனது காதலனுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சக மாணவிகளுடன் சென்று மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்லால் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அந்த வீடியோவை காட்டி மாணவிகளை மிரட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


