பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி- காதலன் உயிரிழப்பு

 
fire

மயிலாடுதுறையில் காதலன் மீதும் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த 9 ஆம் தேதி தன் மீதும் காதலன் ஆகாஷ் மீதும் காதலி சிந்துஜா பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். மருத்துவமனையில் இருவரும் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேறு ஒரு பெண்ணுடன் ஆகாஷ் பழகிய ஆத்திரத்தில் இப்படி செய்ததாக சிந்துஜா வாக்குமூலம் அளித்துள்ளார். தன் வீட்டுக்கு தேவை என ஆகாஷை சிந்துஜா பெட்ரோல் வாங்கி வரக் கூறியுள்ளார். பைக்கில் ஒன்றாக வரும்போது வாக்குவாதம் ஏற்படவே, உடனே தன்னிடம் இருந்த பெட்ரோலை ஊற்றிய சிந்துஜா தீவைத்து கொளுத்தியுள்ளார்.