செலவு செய்த பணத்தை திருப்பி கேட்ட காதலனை நண்பர்களுடன் சேர்ந்து கடத்திய காதலி

 
kidnap

கல்லூரி மாணவரை கடத்திய 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் சட்டக் கல்லூரி மாணவரை கடத்திய 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தனது காதலி பிரிந்து சென்ற நிலையில், அவருக்கு செலவு செய்த பணத்தை மாணவர் திருப்பி கேட்டுள்ளார். மாணவர் தொடர்ந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்துவந்ததால், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார் காதலி. இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர் சசிகுமாரை கடத்திய ரித்தியா, சஞ்சய், சரவணன், தர்ஷினி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.