பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொடூர கொலை - இளைஞருக்கு தூக்கு தண்டனை உறுதி!!

 
crime ttn


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனார்.  இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,  ஜூலை மாதம் 1ஆம் தேதி முட்புதரில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். 

Double-death-penalty-in-Pudukkottai-sexual-assault-case-to-the-culprit

இதுகுறித்த விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.  இந்த விவகாரத்தில் ராஜா என்ற சாமுவேல் கைது  செய்யப்பட்டதுடன் , அவர் மீது பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி  பாலியல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் , குற்றவாளிக்கு மூன்று பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா  அதிரடி தீர்ப்பை வழங்கினார். அத்துடன் 6 மாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

 suicide

இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்து உறுதி செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியலிங்கம் மற்றும் ஜெயச்சந்திரன் அமர்வு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பை ஏற்று, குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.