இன்ஸ்டாவில் புகைபிடித்து, கத்தியுடன் ரீல்ஸ் பதிவிட்ட வீரமங்கைக்கு வலைவீச்சு

 
இன்ஸ்டா

இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறு பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்மை காலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவருகின்றனர். சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மறுநாளே நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடந்த இந்த கொடூர சம்பவங்களால் மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம்  போலீசார் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

special force formed to arrest a teen girl who post a video with knife in social media in coimbatore

மேலும் இந்த பெண் அண்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்தவர்களுடன் இன்ஸ்டாகிராமில் நண்பராக வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோவை மாநகர போலீசார் அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படை ஒன்றையும் அமைத்துள்ளனர்.