ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலி- உணவக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

 
ஷவர்மா சாப்பிட்டு சிறுமி பலி- உணவக உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

 


ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn


நாமக்கல்- சந்தைப்பேட்டை புதூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜாதா (38). இவரது மாமியார் கவிதா (58) மற்றும் குழந்தைகள் கலையரசி(14) பூபதி (12) உறவினர்  சுனோஜ் (38) ஆகியோர் குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் என்ற உணவகத்தில் ஷவர்மா பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுமி கலையரசி இன்று காலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 4 பேர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளார்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, “உணவகத்தில் சாப்பிட்டவர்கள் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக உள்ளனர். 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தனியார் கறி கோழி கடையில் ஹோட்டல் உரிமையாளர் இறைச்சி வாங்கி உள்ளனர். இறைச்சி கடையிலும் ஆய்வு செய்ய பட்டுள்ளது. அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என 5 குழந்தை உட்பட43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் அந்த ஹோட்டலில் சாப்பிட்டவர்கள். உணவக உரிமையாளர் நவீன் குமார் வேளை பார்த்த இருவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரப்படுகிறது” என்றார்.