மீனாட்சி அம்மன் வேடமணிந்து முதல்வர் விஜயை வரவேற்ற சிறுமி..!
மீனாட்சி அம்மன் வேடமணிந்து முதல்வர் விஜயை வரவேற்ற சிறுமி. சிறுமியை அன்புடன் தூக்கி கிரீடம் அணிவித்து மகிழ்ந்தார் முதல்வர் விஜய்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் இன்று (செப்., 28) காலை மதுரைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் உற்சாக தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரைக்கு வந்துள்ள முதல்வர் விஜய், வழியெங்கும் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து கை அசைத்தபடி ரோடு ஷோ நடத்தினார். முதல்வர் விஜய், வழியில் மீனாட்சி அம்மன் வேடத்தில் வரவேற்பு அளித்த குழந்தையை எடுத்து கொஞ்சினார். அரசு மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை அவர் துவக்கி வைக்கிறார். அங்கிருந்து ரூ.10 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள காந்தி மியூசியத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சி முடிந்ததும் அரசு சுற்றுலா மாளிகை செல்கிறார்.
மதிய உணவு, ஓய்வுக்குப்பின் மாலை 5:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின் அங்கிருந்து விமான நிலையம் சென்று சென்னை புறப்படுகிறார்.
மீனாட்சி அம்மன் வேடமணிந்து முதல்வர் விஜயை வரவேற்ற சிறுமி. சிறுமியை அன்புடன் தூக்கி கிரீடம் அணிவித்து மகிழ்ந்த முதல்வர் விஜய்#CMVijay #TVK #TVKVijay #Vijay #Madurai #ThaimamanThangaMothiram #ThaimamanThangaMothiramScheme #TamilNadu #TamilNaduGovernment #RajajiGovernmentHospital… pic.twitter.com/jboF1XjxZ9
— Jaya Plus (@jayapluschannel) September 28, 2026