வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதி சிறுமி பலி

 
ச் ச்

தருமபுரியில் ஸ்டியரிங் பழுதால் அரசு போக்குவரத்து பேருந்து வீட்டின் மீது மோதிய விபத்தில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Image

நூலஹள்ளியில் இருந்து தருமபுரி வந்த அரசு பேருந்து, உழவன் கொட்டாய் பகுதியில் விபத்தில் சிக்கியது. பேருந்தின் ஸ்டியரிங் கட்டாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ராமு என்பவரின் வீட்டின் மீது அதிவேகமாக மோதியது. இதில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி நரசிம்மன் - சோனியா தம்பதியின் மகள் 3 வயது அத்விகா. பேருந்து ஓட்டுநர் தேவராஜ் என்பவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலாவதியான அரசுப் பேருந்துகள் மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்த நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக கொண்டாடினார் என்பது குறிப்பிடதக்கது.