கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலன்- சிறுமி தற்கொலை

 
 suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pregnant

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரும் கல்வராயன் மலைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் தங்கதுரை அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பரிசோதித்தபோது, சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. 

suicide

இதனை அடுத்து 17 வயது சிறுமி தங்கதுரையை செல்போனில் தொடர்பு கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படியும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு தங்கதுரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிலிருந்த விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை குடும்பத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கரியாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காதலன் தங்கதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.