பெண் குழந்தையை ரூ.2.20 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்! சென்னையில் பரபரப்பு
தாம்பரம் அடுத்த கண்ணகி நகரில் பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கண்ணகி நகரில் வசித்து வரும் ஸ்ரீதர்(எ) ஸ்ரீஜி, வினிஷா தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால் மூன்றாவது குழந்தையை விற்க திட்ட மிட்டு தரகர்கள் மூலமாக பெண் குழந்தையை திருவண்ணாமலையை சேர்ந்த 15 வருடங்கள் குழந்தை இல்லாத தம்பதிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்து குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீஸார் 98, 99 பி.எஸ்.எஸ் மற்றும் 81 சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு தொடர்பாக 8 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் சரளா(45), ஸ்ரீதர்(27), சுமதி(35), வினிஷா(23), ஸ்ரீஜா(24), சிவரஞ்சனி(22) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். குழந்தையை திருவண்ணாமலையில் விற்றது தெரியவந்தது குழந்தையை மீட்டு திருவண்ணாமலை குழந்தை நல அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

