கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருட்டு.. இளம்பெண் பரபரப்பு புகார்..

 
கோவை மருத்துமனை மீது புகார் கூறிய பெண் ரவீனா

கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகள்  திருடப்படுவதாக இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பிரவீனா என்பவரது தாய்க்கு,  கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் இருந்ததால் கோவை மாவட்டம் சுந்தரபுரத்தில்  உள்ள  ஃபிம்ஸ் மருத்துவமனையில் (FIMS HOSPITAL) அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு மே மாதம் வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு  ரூ. 70 ஆயிரம் வரை மருத்துவ கட்டணம் செலுத்தி சிகிச்சை பார்த்து வந்த நிலையில்,    ஆனால் அவரது உடல்நிலை குறித்து பிரவீணா மற்றும் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் எந்த தகவலையும் அளிக்காமல் இருந்துள்ளனர்.  

இறப்பு

இந்நிலையில் மே மாதம் 3 ஆம் தேதி பிரவீணாவின் தாய் உள்பட சில நோயாளிகளை, கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள ஒரு இடத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். அடுத்த நாளே  அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் பிரவிணாவிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  அந்த தனியார் மருத்துவமனையில் உடலுறுப்புகள் திருடப்படுவதாக  நேற்று பிரவீனா,  கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  காரணமே இல்லாமல் தன் தாயை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும்,  அந்த மருத்துவமனையில் உடல் உறுப்புகள் திருடப்படுவதாக  சிலர் தன்னிடம் ரகசியமாக கூறியதாக தெரிவித்துள்ளார்.

கோவை மருத்துவமனை

மேலும், தனது தாயாரின் நகைகளுக் காணமால் போனாதாக கூறிய பிரவீனா, இதுகுறித்து கேள்வி கேட்டபோது போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  காவல் துறையினர் முன்பாகவே மருத்துமனை நிர்வாகத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறினார். தன்னிடம் இருந்த ஆதாரங்களையும், போலீஸார் அழித்ததாக கூறும் பிரவீனா, உடல் உறுப்புகளை திருட்டு  உள்பட பல்வேறு சட்டவிரோத செயல்கள் அந்த மருத்துவமனையில் நடப்பதாக பகிரங்க குற்றாட்டுக்களை முன்வைத்தார்.  மருத்துவமனை  நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போத்தனூர் எஸ்.ஐ. முர்கேஷை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தார்.