விரைவில் முக்கிய முடிவு?- கிரிஷ் சோடங்கர் சொன்ன தகவல்

 
ஜ்

நோன்பு திறப்பதற்காகவே சென்னை விமான நிலைய காத்திருப்பு அறையில் காத்துக் கொண்டிருந்தோம் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையம் வந்த காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். விமான நிலைய காத்திருப்பு அறையில் 2 மணி நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். 

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “நோன்பு திறப்பதற்காகவே சென்னை விமான நிலைய காத்திருப்பு அறையில் காத்துக் கொண்டிருந்தோம். அகில இந்திய தலைமையின் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து உரிய அறிவிப்பு வெளியாகும். கார்கேவின் அறிவுறுத்தலுக்கு காத்திருக்கிறோம்” என்றார்.