அதிமுக அமைப்பு செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம்..!
Jul 20, 2026, 06:25 IST1784508954000
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏழுமலை அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தார். ஆனால் 2021-ல் கட்சிக்கு எதிராகப் பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் ஓபிஎஸ்-ன் உரிமை மீட்புக் குழுவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்தார். ஓபிஎஸ் திமுகவில் இணைய கடந்த மார்ச் மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்துள்ளார்.
கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

