ராட்சத கிரேன் மோதி வீடு சேதம் - மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது விபரீதம்...

 
tn

மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதமடைந்த சம்பவம் போரூரில் அரங்கேறியுள்ளது.

metro


போரூர் அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் மோதியது. இதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதை கண்ட  பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தனர். வீட்டில் இருந்த பீரோ, கட்டில், ஃபேன் போன்ற உடைமைகள் சேதமாகின.

tn

உயரமான இயந்திரத்தை கையாண்ட ஆபரேட்டர் வீட்டை கவனிக்காமல் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அத்துடன் பூகம்பம் வந்ததாக நினைத்து மற்ற குடியிருப்பு வாசிகளும் வீட்டில் இருந்து வெளியேறினர். இதை தொடர்ந்து  மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.