100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இராட்சத பலூனை பறக்கவிட்டு விழிப்புணர்வு..!

 
1
நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் இன்று இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் /கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பறக்க விட்டார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 125 அடிக்கு இந்த பலூன் பறக்கவிடப்பட்டு உள்ளது. 

இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் விஜய ரங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து கோயம்புத்தூர் நகரப் பேருந்து நிலையத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேருந்துகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.