இந்து மதத்திற்கு திரும்பிய இசையமைப்பாளர் ஜிப்ரான்

 
டிக் டாக், ஹெலோ செயலிகளில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்…

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் இஸ்லாம் மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஜிப்ரான், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும், தனது பெயரையும் மாற்றிக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இஸ்லாம் மதத்தை பின்பற்றி கொண்டு இருந்தேன். ஆனால் கடைசி மூன்று, நான்கு வருடங்களாக மறுபடியும் இந்துவாக மாறிவிட்டேன். சட்டப்பூர்வமாகவும் அனைத்து மாற்றங்களும் செய்துவிட்டேன்” என்றார். இதுவரை தன்னுடைய படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அவர், குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என தன்னுடைய புது பெயரை போட்டிருந்தார்.