இறந்திடவா நீ பிறந்தாய்; பாடல் பாடி அஞ்சலி செலுத்திய கானா பாலா !

 
gana bala

படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு, "இறந்திடவா நீ பிறந்தாய்..." என்று கண்ணீர் மல்க பாடல் பாடி அஞ்சலி செலுத்தினார் பிரபல கானா பாடகர் கானா பாலா.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உடல் இன்று இறுதி மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் இன்று இறுதி மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், இயக்குனர் வெற்றிமாறன், பா ரஞ்சித் உள்ளிட்ட திரை பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபல கானா பாடகர் கானா பாலா, "இறந்திடவா நீ பிறந்தாய்..." என்று கண்ணீர் மல்க பாடல் பாடி அஞ்சலி செலுத்தினார்.