பழிக்குப் பழி! எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் ஆகும் #GetOutStalin

#GetOutModi ஹேஸ்டேக் நேற்று திமுகவினரால் டிரெண்டிங் செய்யப்பட்ட நிலையில், இன்று #GetOutStalin ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக-பாஜக இடையே கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் பிரதமர் மோடியை விமர்சித்து பார்க்கட்டும் என கூறினார். பிரதமர் மோடியை கெட் அவுட் என கூற தைரியம் இருக்கிறதா உதயநிதிக்கு? என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார். அண்ணா அறிவாலயம் குறித்து அண்ணாமலை பேசி இருந்தார்...முடிந்தா அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்க என கூறினார்.
இந்த நிலையில், நேற்று எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi ஹேஸ்டேக் திமுகவினரால் டிரெண்டிங் செய்யப்பட்டது. பிரதமர் மோடியை கெட் அவுட் என கூற தைரியம் இருக்கிறதா உதயநிதிக்கு? அண்ணாமலை சவால் விடுத்த நிலையில், நேற்று இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டது. இந்த நிலையில், திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று #GetOutStalin ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GetOutStalin ஹேஸ்டேக்கை பாஜகவினர் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.