ரெடியாக இருங்க மக்களே..! - அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை..!

 
Rain

சென்னை வானிலை மையம் அறிக்கை:

தென் மேற்கு பருவமழை அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் மே 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. 

இன்று (மே 15) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 16ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 17ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 18ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 19ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.