உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் பெறலாம்!!

 
tn

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது.

tn

உதகை மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் விநியோகம் இன்று காலை 6 மணி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது . தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களான உதகை , கொடைக்கானலுக்கு கோடைகாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இதன் காரணமாக வாகன நெரிசல் , விடுதி அறைகள் பற்றாக்குறை,  உணவு பெறுவது சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.  இதை நடைமுறைப்படுத்தும் வகையில் இ-பாஸ் முறையை உயர்நீதிமன்ற மதுரைகிளை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டது.  இதன்படி நாளை முதல் ஜூன் 30-ம் தேதி வரை உதகை மற்றும் கொடைக்கானல் செல்வோர் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.  இதன் காரணமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக, இ-பாஸ் பெறும் நடைமுறை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தொலைபேசி எண்களை அடிப்படையாக வைத்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

 அதேசமயம் வெளிநாட்டு பயணிகள் தங்கள் ஈமெயில் முகவரியை பயன்படுத்தி இ-பாஸ் பெறலாம் . பெயர், முகவரி,  எத்தனை பேர் செல்கிறீர்கள்? எந்த தேதி முதல் எந்த தேதி வரை தங்கியிருப்பீர்கள், இரு சக்கர வாகனம்,  கார் , வேன்,  பேருந்து என எந்த வாகனத்தில் பயணம் செய்கிறீர்கள் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த பிறகு e pass பெற்றுக் கொள்ளலாம்.