போலீஸ்க்கு தங்க கட்டிகளை வாரி வழங்கிய ஜெம் வீரமணி?- பகீர் திருப்பம்

 
போலீஸ்க்கு தங்க கட்டிகளை வாரி வழங்கிய ஜெம் வீரமணி?- பகீர் திருப்பம்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்தடுத்த திருப்பமாக போலீஸ்க்கு தங்க கட்டிகளை வாரி வழங்கியது தெரியவந்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் வீரமணி மீது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது அந்த புகாரிக்கு சிறுமி தொடர்பான வீடியோ ஆதாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழுக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணைக்கு பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி 2026 பிப்ரவரியில் வழக்கை முடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அந்த முடிப்பு அறிக்கையை ஏற்காமல் மேல் நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டது.  அதன் பின்னர் நடைவற்ற மறுவிசாரணையில் வீடியோவில் இருந்ததாக கூறப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது மறுவிசாரணை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி அவரது கணவர் மகேந்திர சிம்ஹான் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். 

சிறப்பு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. போலீசாரிடம் வீரமணி அளித்துள்ள வாக்கு மூலத்தில் குற்றத்தை மறைக்க பணமாக வாங்கினால் பிரச்சனை ஏற்படும் என்பதால் போலீஸ் அதிகாரிகள் என்னிடமிருந்து பரிசாக தங்கக் கட்டிகள் வாங்கினர். இதை இடைத்தரகராக நின்று செயல்பட்ட ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மகன் பிரகாஷ் (திமுக )வாங்கி கொடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார் இந்த தகவல் போலீஸ் வட்டாரத்தில் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.