ஜெம் வீரமணி வழக்கு - சென்னை சைபர் கிரைம் எச்சரிக்கை

 
பாலியல் வன்கொடுமை - ஜெம் வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகள் வாக்குமூலம்

ஜெம் வீரமணி வழக்கில் போக்சோ சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்ட சமூக வலைதளம் மற்றும் இணையதள பக்கங்களுக்கு சென்னை சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

'ஜெம் கிரானைட்ஸ்' ஆர்.வீரமணி எளிய குடும்பங்களை சேர்ந்த மற்றும் ஆதரவற்ற 100 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன.  ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது தமிழக அரசு ஜெம் வீரமணி வழக்கை இனி SIT விசாரிக்கும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்ற பெண்ணும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஜெம் வீரமணியின் உதவியாளர் கணேசன் என இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் போக்சோ சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்ட சமூக வலைதளம் மற்றும் இணையதள பக்கங்களுக்கு சென்னை சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு புலனாய்வு குழு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்சோ வழக்கு தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் நீக்கக்கோரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை பதிவுகளை நீக்காத 40க்கும் மேற்பட்ட சமூக வலைதள மற்றும் இணையதள பக்கங்கள் மீது சைபர்கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை பொதுவெளியில் பகிரவோ, விவாதிக்கவும் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.