"சமூகவலைதளங்களில் தவெகவினர் பொய் செய்தி பரப்பிக் கொண்டு இருக்கின்றனர்”- கீதா ஜீவன்

 
"சமூகவலைதளங்களில் பொய் செய்தி பரப்பிக் கொண்டு இருக்கின்றனர்”- கீதா ஜீவன்

தூத்துக்குடியில் திமுக ஆட்சியில்தான் ஏசி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. 850 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் ஆட்சி மாறியதில் இருந்து எல்லாம் நாங்கள் செய்தது என தவெகவினர் சமூகவலைதளங்களில் பொய் செய்தி பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். 

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'பிங்க் பேட்ரோல்' (Pink Patrol) என்ற திட்டத்தை பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டி 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்று தொடங்கியுள்ளார்கள் அவருடைய கட்சியிலே ஒரு பெண் கதறி அழுது கொண்டிருப்பது CM சார்க்கு கேக்கலயா.? தனி மனித ஒழுக்கம் பற்றி பேசி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து நழுவுகிறார். சொந்த கட்சியினருக்கே நீதி கிடைக்காதபோது ஒட்டுமொத்த தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவீர்கள்? ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தில் உங்கள் சொந்தக் கட்சிக்காரருக்கே நீதி கிடைக்காதபோது தமிழகப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு தருவீர்கள்? த.வெ.கவினர் அட்ராசிட்டி ரொம்ப அதிகமாகிடுச்சி. பல்வேறு இடங்களில் தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரித்துஅன உதயநிதி தலைமையில் திமுக வலுவாக செயல்படுகிறது. தேர்தல் ரிசல்ட் வர அன்னைக்கு வரைக்கும் மின்சார தட்டுப்பாடு எதும் இல்லையே.. இதுக்கு காரணம் நிர்வாக சீர்கேடுதான்” என்றார்