வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் - அரசிதழ் வெளியீடு!

 
vote counting

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்  6 கட்ட தேர்தல்கள் முடிவுற்றது.  இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.  தமிழ்நாட்டில்  உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்புடன்  சிசிடிவி கண்காணிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.வரும் ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும் ,  8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். 

voting

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் 2024 இல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது.  பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.