"எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர்" - காயத்ரி ரகுராம் புகழாரம்!!

 
tn

பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது அதிமுக என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

gayathri-4

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்  நடிகை காயத்ரி ரகுராம். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன். என் தந்தை அதிமுகவில் பயணித்துள்ளார் என்று கூறினார். 


இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது அதிமுக. 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வதோடு, எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம் வெற்றிநடை போட உழைப்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.