’காலணியோடு காவடி எடுக்கிறான்’ அண்ணாமலையை சாடிய காயத்ரி ரகுராம்

 
gayathri raghuram annamalai

காலணியோடு காவடி எடுக்கிறான், இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என பாஜக மாநில தலைவ்ர அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலில் காலணி அணிந்து காவடி ஆட்டம் ஆடுவது போன்ற போட்டோ வலைதளத்தில் பரவி வருகிறது. நாம் வணங்கும் தெய்வத்தின் அடையாளத்திற்கு உரிய மதிப்பு கொடுக்காமல் போகிற போக்கில் விளையாட்டு பொருள் வைத்து ஆடுவது போல ஆடுவது இந்து மக்களின் தமிழ் கடவுளான முருகனை அவமானப் படுத்தியது கண்டனத்திற்குரியது என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், “காலணியோடு காவடி எடுக்கிறான். வன்மையாக கண்டிக்கிறோம் தமிழகடவுள் முருகன் பெருமானின் மிகவும் எல்லோரும் பயபக்தியுடன் செய்யும் சடங்கு இது.. பிஜேபி தமிழ் மக்களின் நம்பிக்கை அவமதிப்பு செய்யலாக கருத்தவேண்டும்.. அண்ணாமலை கத்துக்குட்டி இப்படி அவமதிப்பு செய்வதை நிறுத்தி கொள்ளவேண்டும்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.