"இயல்பா பேசகூடிய வார்த்தை... கண்கள் இருந்து தான் தண்ணி வரும்"- உதயநிதியின் பேச்சுக்கு காயத்ரி ரகுராம் புது விளக்கம்

 
“நீங்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர்”... உதயநிதியை விமர்சித்த காயத்ரி ரகுராம்

உதயநிதி அங்கிளுக்கு மட்டும் அல்ல, விஜய் அங்கிளுக்கும் நியாயம் இருந்தால் ஆதரவு கொடுப்பேன் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளத்தில், “உதயநிதி அங்கிளுக்கு மட்டும் அல்ல, விஜய் அங்கிளுக்கும் நியாயம் இருந்தால் ஆதரவு கொடுப்பேன். எந்த மனிதருக்காகவும் அதே நிலைப்பாடுதான். இரட்டை அர்த்தத்தில் பேசுவது சட்டப்படி தவறு என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பதை யாராலும் உறுதியாக அறிய முடியாது. என்னைப் பொறுத்தவரை, "கண்கள் இருந்து தான் தண்ணி/ கண்ணீர் வரும்" என்பதுதான் சரி. அப்படி தான் இயல்பா பேசகூடிய வார்த்தை. 

ஆனால், #TVK சிறிய குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தவறான கருத்துகளைப் போதித்து, அனைவரையும் வேறு விதமாகச் சிந்திக்கச் செய்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன்? அவர்கள் நம்மை தவறாக நினைக்க வைத்ததை நீங்கள் கவனித்தீர்களா? வாயிலிருந்து வரும் எச்சில் அல்லது ஜொள்ளு "தண்ணி" அல்ல, என்பதுதான் என்று நான் நினைக்கிறேன்.நாம் சிறுநீர் கழிப்பதை "சிறுநீர்" என்றுதானே சொல்கிறோம். இயல்பாக யூரின் தான் சொல்லுவோம்.  ஆம், உதயநிதி மற்றவர்களைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் தவறாகப் பேசியிருக்கிறார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் விஜய் கைது நடவடிக்கை பழிவாங்கும் நோக்கத்துடனும், அர்த்தமற்றதாகவும் எனக்குத் தோன்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.