என் தொழில், பெயரை கெடுத்ததற்கு நன்றி; பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி- காயத்ரி ரகுராம்

 
gayathri-4

பாஜகவிலிருந்து காய்த்ரி ரகுராமை நிரந்தரமாக நீக்கம் செய்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

Gayatri Raghuram warns of a smack after Annamalai suspends her from BJP-  The New Indian Express

கட்சியில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த காய்திரி ரகுராம், தான் கட்சியில் இருந்து வெளியேறுவதாக டிவிட்டரில் அறிவித்தார். இந்நிலையில் அவரது ராஜினாமாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்றுக்கொண்டதாகவும், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாகவும் பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

Image

 
இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், அபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன், என்ற பதிவுடன், ”என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி. பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.