உதயநிதியின் மகன் சிக்கினான்; அடல்ட் வீடியோ,ஆடியோ, போட்டோ புகழ் அண்ணாமலை- காயத்ரி ரகுராம்

 
annamalai and gayathri

தமிழக பா.ஜ.க மாநிலப் பொறுப்பிலிருந்த காயத்ரி ரகுராம், அந்தக் கட்சி மேலிடத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின் கட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவந்த காயத்ரி ரகுராம் நேற்று அந்தக் கட்சியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அண்ணாமலை தலைமையின்கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டியடிக்கப்படுவதுதான் நடந்துகொண்டிருக்கிறப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

gayathri-4

அதற்கு இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கட்சியை விட்டு வெளியில் செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வழக்கம், வெளியேறுவோர் என்னை புகழ வேண்டிய அவசியமில்லை. பெண்கள் நிறைய பேர் பாஜகவில் இன்று இணைகின்றனர். காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும். திமுகவை நான் ஆக்ரோசமாக எதிர்த்து வருகிறேன் , பாஜகவில்  சிலர் தவறாக திமுகவுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் , அதனால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும்” எனக் கூறினார். 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை. என் கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர்களை திட்டுவதும், மிரட்டுவதும் உங்கள் விரக்தியை காட்டுகிறது, அண்ணாமலை. பத்திரிகைகளை அவமதித்ததற்காக கண்டிக்கிறேன். ஹனிட்ராப் பிரச்சினை வந்தபோது ரஃபேல் வாட்ச் வைத்து திசை திருப்பிவிட்டீர்கள். இப்போது பிஜிஆர் வைத்து திசை திருப்பிவிட்டீர்கள்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.