அண்ணாமலை 2 ஆண்டுகளுக்கு முந்தைய செக்ஸ் வீடியோவை வெளியிடப்போவதாக கூறுகிறார்- காயத்ரி ரகுராம்

 
gayathri-4

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் பங்கேற்குமாறு பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஆரம்பத்தில் தன் அரசியல் கருத்துகளை முன்வைத்தார். 

வீடியோக்களை போலீசிடம் கொடுக்கப்போகிறேன்”; அண்ணாமலை மீது காயத்ரி பரபரப்பு  குற்றச்சாட்டு | nakkheeran

தொடர்ந்து  அண்ணாமலையை நோக்கி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், சில கேள்விகளுக்கு பதில் கூறாமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களின் பெயரையும், அவர்கள் அங்கம் வகிக்கும் பத்திரிகை நிறுவனத்தின் பெயரையும் கேட்டு அடாவடித்தனமாக நடந்து கொண்டிருக்கின்றார். அதுமட்டுமின்றி,  அண்ணாமலையின் அழைப்பின்பேரில், அவரின் அறைக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் முருகேசன் சென்றிருக்கின்றார். அப்போது, நிருபர் முருகேசன் மட்டுமின்றி அவருடன் இருந்த பத்திரிகையாளர்களை அண்ணாமலை உதாசினப்படுத்தி தரம் தாழ்ந்து நடந்துகொண்டிருக்கின்றார். பாஜக நிர்வாகிகள் சிலரும் பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் நடந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார். அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது. அண்ணாமலை நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது செய்யவில்லை. டேப்களை மட்டும் சேகரிக்கிறீர்களா?

கட்சியில் இருப்பவர்களுக்கு ஒருவரின் நலமும் பாதுகாப்பும் அமைய வேண்டும் என்று அண்ணாமலை வாழ்த்த வேண்டும். ஒருவரை கட்சியை விட்டு வெளியே செல்லும் போது மற்ற இடங்களில் அவர்கள் நலமும் பாதுகாப்புடன் இருந்தால் அண்ணாமலை அதை கொடுக்க தவறிவிட்டார் அல்லது தோல்வியடைந்தார் என்று அர்த்தம். தற்போது இது சரியான ஆதாரம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன” எனக் கூறினார். 

முன்னதாக காயத்ரி ரகுராம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அண்ணாமலை, “கட்சியை விட்டு வெளியில் செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வழக்கம், வெளியேறுவோர் என்னை புகழ வேண்டிய அவசியமில்லை. பெண்கள் நிறைய பேர் பாஜகவில் இன்று இணைகின்றனர். காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும். திமுகவை நான் ஆக்ரோசமாக எதிர்த்து வருகிறேன் , பாஜகவில்  சிலர் தவறாக திமுகவுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் , அதனால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும்” எனக் கூறினார்.