ரஃபேல் வாட்ச் அணிவது மட்டும் தேசபக்தி அல்ல! அண்ணாமலையை சீண்டும் காயத்ரி

 
gayathri raghuram annamalai

அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான புத்தகத்தை பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

latest tamil news

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “போலியான புத்தகத்தை அமைச்சர் விளம்பரப்படுத்துவது அபத்தமானது. தேச பக்தி ஐபிஎஸ் வேலையை ஒருவர் எப்படி ராஜினாமா செய்யலாம்? இந்த சுயநல அண்ணாமலையால் ஒரு ஏழை மாணவன் ஐபிஎஸ் ஆகும் வாய்ப்பு நழுவிவிட்டது. 

வெறும் 9 வருடங்கள் தேச பக்தி வேலையை மட்டும் செய்துவிட்டு ராஜினாமா செய்த அண்ணாமலை அரசு பணத்தை வீணடித்தார். ஐபிஎஸ் பயிற்சி பெறும் பலருக்கு இது எப்படி உத்வேகமாக இருக்கும்? அப்போது பலர் ராஜினாமா செய்யத் தொடங்குவார்கள் இல்லையா? ரஃபேல் வாட்ச் அணிந்து மட்டும் தேச பக்தி வரக்கூடாது, அரசு வேலைகளில் தேச சேவையில் இருக்க வேண்டும். பாதி வழியில் ராஜினாமா செய்வது சுயநலத்தை காட்டுகிறது. #AnnamalaiShame” என விமர்சித்துள்ளார்.


பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது, அவர் தனது பணியில் எதிர்கொண்ட சவால்கள், போலீசாரின் அன்றாட பணிகள், பசுமையான நினைவுகள் உள்ளிட்டவற்றை தொகுதி காக்கி என்ற புத்தகத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு எழுதியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த புத்தகத்தையே டிவிட்டரில் பகிர்ந்த  மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ, அனைவருக்கும் ஊக்கமளிக்கக்கூடிய புத்தகம் என புகழாரம் சூட்டியிருந்தார்.