#BREAKING இறால் பதப்படுத்தும் ஆலையில் வாயு கசிவு - ஒருவர் பலி! 70க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்

 
ச்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், திடீரென ஏற்பட்ட அமோனியா நச்சு வாயு கசிவு காரணமாக நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். 74க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெற்றுவந்த, பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 8 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு துறையினர் மாஸ்க் அணிந்து தொழிற்சாலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி நேரில் ஆய்வு செய்துவருகிறார்.

இதனிடையே நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த இடைக்கால நிவாரண உதவிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும், தொழிற்சாலைகளில் இதுபோன்ற அபாயகரமான வாயுக்களை கையாளும் போது உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள இதுபோன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர் பாதுகாப்பு தணிக்கையை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.