சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக நேற்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும். உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550 ஆக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.43.50 குறைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் ரூ.1,965 ஆக இருந்த விலை தற்போது ரூ.1,921.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இனிமேல் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.853க்கு விற்பனை செய்யப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.