வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!!

 
rr

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ₹31 குறைந்துள்ளது. 

tn

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது.  அதே போல ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்  விலையும் மாத முதல் நாளிலேயே  உயர்வை சந்தித்து வருகிறது.  எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.

tn

இந்நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ₹31 குறைந்து ₹1,809.50க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து 4வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை மாற்றமின்றி  ரூ.818.50  க்கு விற்பனையாகிறது குறிப்பிடத்தக்கது.