பெரம்பலூர் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
Aug 20, 2026, 12:21 IST1787208715727
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் 10 மீட்டர் அளவிற்கு பரவிய தீ ஜுவாலையால் அந்த பகுதியில் இருந்த பலர் காயமடைந்தனர்.
அதில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி அளவில் திருச்சி தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (வயது 47) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த டீக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

