சேலத்தில் சிலிண்டர் வெடித்த‌தில் ஒருவர் பலி; 5 வீடுகள் தரைமட்டம்!!

 
salem

சேலத்தில்  சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.

salem

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் இன்று சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தினால் அருகில் இருந்த 5 வீடுகள் தரைமட்டம் ஆனது.  அத்துடன் இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  அத்துடன் 7 க்கும் மேற்பட்டோர் விபத்து பகுதியில் சிக்கியுள்ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.  விபத்தில் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தீயணைப்புத் துறை ஊழியர் பத்மநாபன் என்பவர் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.