“எட்டிப்பார்த்துட்டே இருந்தா ஆ.. ஆ.. நான் ஓரமா நிற்கிறேன்”- பிரஸ்மீட்டில் டென்சனான கங்கை அமரன்

 
w w

கவிஞர் வாலியின் 94 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிடி ஹாலில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் கே. பாக்யராஜ், லிங்குசாமி, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கங்கை அமரன் உள்ளிட்டோருக்கு விருதும் வழங்கப்பட்டது. 

மேடையில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், “அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை பாடியவர், தங்கள் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசி, பெரியவர்களின் ஆசிர்வாதம் பாட்டு வழியே கேட்கும் போது சந்தோஷம் தான். பாக்யராஜை மேடையில் கலாய்த்து பேசிய கங்கை அமரன், நான் பாடினால் எவ்வளவு நேரம் வேனாலும் கேட்பீர்கள் தானே என்று ரசிகர்களை பார்த்து சிரித்து கொண்டே கேட்டார். நாங்கள் இசையில் வளர காரணமாக இருந்தது எங்கள் அம்மா தான். அத்தோடு சில எழுத்தாளர்களின் எழுத்துக்களும் தான்” என்றார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், கவிஞர் வாலியின் பிறந்த நாள் விழாவில் எனக்கு கவிஞர் விருது வழங்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி என்று பேசிக் கொண்டு இருந்த போது, அருகில் இருந்த மற்றொரு நபர் இவரது முகத்தை மறைக்கும் விதமாக நிற்க, வாங்க நீங்க வந்து பேசுங்க என்று திடீரென கோபப்பட்டு கிளம்ப முயன்றவர், ஆக்ஷன் மூலம் தனது கோபத்தை வெளிக்காட்டினார். இவரது கோபத்தை பார்த்து அந்த நபர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். அதன் பின்னர் சற்று அமைதியாகி பேச்சை தொடர்ந்தவர், கவிஞர் வாலியின் பாடல்கள் மற்றும் அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார். இப்போது இருக்கும் காலகட்டத்தில் நிறைய இயக்குனர்கள் படங்களில் இளையராஜா பாடல்களை பயன்படுத்துவதை பற்றிய கேள்விகளுக்கு... நாம் அமர்ந்து பேசுவோமா என மீண்டும் டென்ஷன் ஆனார். மீண்டும் செய்தியாளர் தற்பொழுது வரும் பாடல்களும் வரிகளும் குண்டு போல் இல்லை என்கிறார்கள் என்ற கேள்விக்கு? எல்லாவற்றையும் ஏற்று கொள்ள தான் வேண்டும் என்று கூறினார்.