“இளையராஜாவை இளையராஜாவாக இருக்கவிடுங்கள்”- கங்கை அமரன்
கங்கை அமரன் எழுதியுள்ள உயிரிணையே ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கங்கை அமரன் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பேசிய கங்கை அமரன், “சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ்ப் படம் 3 படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பாடல் நன்றாக வந்துள்ளது. ஏ ஐ நம்மை கெடுத்துக் கொண்டு உள்ளது. அதனை நம்பி நாம் வேலை செய்தால் பிற்காலத்தில் நமது மூளை வேலை செய்யாது. வருங்கால குழந்தைகள் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் நல்லதை மட்டும் எழுதுங்கள். பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இளையராஜா பற்றி தவறாக எழுதினார். யுவன் சங்கர் ராஜா துபாயில் செட்டில் ஆகிவிட்டார். கார்த்திக் ராஜா இளையராஜா கூட இருக்கிறார். இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்று ஏன் எழுத வேண்டும். இளையராஜாவை அதற்கு இறக்குகிறீர்கள். 50 ஆண்டுகள் நிலையாக நின்றுள்ளார்.
இளையராஜா யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். பயில்வானிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இளையராஜா தனிமையை நாடி இருக்கிறார். அவரை அவராக இருக்க விடுங்கள்” என்று பேசினார்.

