கனிம வளத்துறை அமைச்சரை மிரட்டும் கும்பல்
கனிம வளத்துறை அமைச்சரை மிரட்டும் கும்பல்கனிம வளத்துறை அமைச்சர் தனக்கு வேறு துறை மாற்றித் தருமாறு முதல்வர் விஜயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிமவளத்துறை அமைச்சராக காரைக்குடி எம்எல்ஏ டி.கே பிரபு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக விதிகளை மீறி செயல்படும் குவாரிகளை கண்டறிந்து அந்த குவாரிகளை தற்காலிகமாக நடவடிக்கை எடுத்ததோடு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பை உடனடியாக செலுத்தவும் நடவடிக்கை எடுத்தார். அவரது இந்த நடவடிக்கையால் குவாரி உரிமையாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். மேலும் கனிமவளத்துறை அமைச்சரை தூக்கவும் முக்கிய பிரமுகர்களுக்கு பல கோடி கொடுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. சட்ட விரோத குவாரிகளை மூடிய அமைச்சர் பிரபுவுக்கு பல்வேறு வழிகளில் அந்த கும்பல் நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அதிலும் கட்சியில் இருக்கும் சிலரே பணத்தாசையில் அவர் மீது புகார்களை அள்ளி வீசவும் துணிந்து இருப்பதாக அவருக்கு தெரியவந்தது.
பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவரால் வெளிப்படையாக இந்த துறையில் செயல்பட முடியாமல் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே கனிமவளத்துறை அமைச்சர் பிரபு முதல்வர் விஜயை சந்தித்து தனக்கு வேறு ஒரு துறை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கனிமவளத் துறை அமைச்சர் வெளி மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கனிம வள கடத்தலை தடுத்ததாலும் சட்டவிரோத குவாரிகளை மூடியதாலும் அந்த கும்பல் தொடர்ந்து பல்வேறு வழிகளில் நெருக்கடியை சமாளிக்க அவர் விலக முடிவு செய்துள்ளார். கனிமவளத் துறை அமைச்சரை சுதந்திரமாக செயல்பட முதல்வர் விஜய் அனுமதிக்கும் பட்சத்தில் அவரது அதிரடி நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும் ஆனால் அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து விஜய் அவரை பதவிலிருந்து விடுவித்தால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகும் என்று தவெகவினரே பேசி வருகின்றனர்.

