ஆணா?, பெண்ணா? கருவிலுள்ள பாலினத்தை கண்டறிந்து கூறி வந்த கும்பல் வசமாக சிக்கியது
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குடிபெயர்ந்து குடி பெயர்ந்து புதுமையாக வாடகை வீடு எடுத்து அங்கே ஸ்கேன் சென்டர் போல் மிஷின் வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆணா? பெண்ணா? என்று பார்த்த ப்ளஸ் டூ படித்த போலி ஆசாமி மற்றும் உடந்தையாக இருந்த தரகர் வீட்டு உரிமையாளர் என மூன்று பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் தனியார் திருமண மண்டபத்தின் அருகில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கருகூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(44) என்பவர் ஒரு வாடகை வீட்டில் மருத்துவ பரிசோதனை மிசின் வைத்து கர்ப்பிணி தாய்மார்களின் கருவறையில் ஆணா பெண்ணா என்று பரிசோதனை செய்து வந்து போலி டாக்டராக கர்ப்பிணிகளுக்கு விவரங்கள் வழங்கி வந்த வெங்கடேசன் என்பவரை வாழப்பாடி போலீசார் பிடித்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த விளாரிபாளையம் பகுதியை சார்ந்த லதா (44) என்ற பெண்ணையும் பிடித்து கைது செய்தனர். மேலும் வீட்டு உரிமையாளர் சக்திவேல் (31)என்பவரையும் கைது செய்தனர். இந்த விகாதாரத்தில் மூன்று பேரை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். மேலும் திருப்பத்தூரைச் சேர்ந்த கனகா , மற்ற மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ்,மகாலட்சுமி உள்ளிட்ட பலர் இவர்களுக்கு புரோக்கர்களாக இருந்து வந்துள்ளனர்,அவர்கள் மீதும் புகார் கொடுத்ததின் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி, ஆத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் யோகானந்த் ,வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் பிடித்து வாழப்பாடி போலீசாரிடம் கொடுத்த தகவலின் பெயரில் வாழப்பாடி போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதனால் பேளூரில் பரபரப்பு நிலவுகிறது. அபிநயா, புவனேஸ்வரி ஆகிய பெண்ணுக்கு இன்று பரிசோதனை செய்ய வரவழைத்த பொது சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினர் சென்று பிடித்துள்ளனர். இந்த போலி வைத்தியம் பார்க்கும் குழு ஆங்காங்கே சில மாதங்களுக்கு வீடுகள் வாடகைக்கு எடுத்து அந்தந்த பகுதியில் வைத்தியம் பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது இவர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இந்த வைத்தியம் பார்க்காமல் குறிப்பிட்ட சில காலங்களுக்கு ஒவ்வொரு இடத்தில் இவர்கள் இந்த போலி வைத்தியம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கும் இவர்கள் இதுபோன்று பல்வேறு இடங்களுக்கு வரவழைத்து இதுபோன்று சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்து உங்களை கைதுமேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


