தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க ஏற்பாடு..!!
Sep 9, 2026, 11:03 IST1788932005718
தமிழகத்தில் நகர்ப்புறங்கள், கிராமப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க இந்து முன்னணி அமைப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
சென்னையில் 5,501 இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ள நிலையில், எர்ணாவூரில் பிரமாண்ட சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி, வடசென்னை மற்றும் கொட்டிவாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்ட உள்ளன. விழாவை ஒட்டி, காப்பு கட்டி 10 நாட்கள் மேற்கொள்ளப்படும்

