காந்தியடிகளின் நினைவு நாள் - மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

 
tn

காந்தியடிகளின் நினைவுநாளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றார்.

arivalayam

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, இன்று  மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

gandhi

இந்நிலையில் காப்போம் காப்போம் மனிதநேயம் காப்போம்; விரட்டுவோம் விரட்டுவோம் மதவெறியை விரட்டுவோம்; காப்போம் காப்போம் வேற்றுமையில் ஒற்றுமையை காப்போம்; வேரறுப்போம் வேரறுப்போம் மதவாத சக்திகளை வேரறுப்போம் வேண்டும் வேண்டும் அமைதியான இந்தியா வேண்டும்; வேண்டாம் வேண்டாம் வகுப்புவாத இந்தியா வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.