தமாகாவுடன் இன்று ஐக்கியமானது காந்திய மக்கள் இயக்கம் ..!
Dec 20, 2025, 12:42 IST1766214758953
காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், ஈரோட்டில் இன்று (டிச., 20) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை, ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளார். தமாகா தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.


