கந்த சஷ்டியின் சிகர நிகழ்ச்சி- சூரனை வேலால் வதம் செய்தார் முருகன்
Nov 18, 2023, 17:39 IST1700309375765

அரோகரா... முழக்கங்கள் விண்ணைப் பிளக்க சிங்கமுகனாக வந்த அசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.
தமிழ் கடவுளான முருகக் கடவுள் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கிவரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டு இத்திருவிழா 13-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு காலை மாலை இரண்டு வேளை யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்று வரும். இன்று அதிகாலையில் 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் அதைத் தொடர்ந்து நடைபெற்றன.
கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான, திருச்செந்தூர் கடற்கரையில் ஜெயந்திநாதர் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.