மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் என புகார்-போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கிய டோக்கன்கள், ஆவணங்கள்
திருப்பூரில் உள்ள மனமகிழ் மன்றத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் டோக்கன்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலாளர் கைது செய்யபட்டார்.

திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் "தி திருப்பூர் கிளப்" என்ற பெயரில், மனமகிழ் மன்றம் ஆனது செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த தனியார் மனமகிழ் மன்றத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் வாழ்நாள் உறுப்பினர்களாக இருந்து வரும் நிலையில், இங்கு உறுப்பினராக உள்ளவர்கள் தங்களுடைய நேரத்தை செலவீடு செய்வதற்காக டென்னிஸ், பேஸ்கட் பால் போன்ற விளையாட்டு வகைகள் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த கிளப்பில் உள்ள ஒரு அறையில் டேபிள் அமைத்து பலர் சீட்டு ஆடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலையில் தி திருப்பூர் கிளப் என்ற பெயரில் செயல்படும் தனியார் மனமகிழ் மன்றத்தில் தொழிலதிபர்கள் தங்களுடைய நேரத்தை செலவீடு செய்வதற்காக டென்னிஸ் பேஸ்கட் பால் போன்ற விளையாட்டு வகைகள் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது தொழிலதிபர்கள் பணத்தை வைத்து… pic.twitter.com/HCFchvn8FZ
— Oneindia Tamil (@thatsTamil) June 19, 2025
இந்நிலையில் மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் மனமகிழ் மன்றத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய டோக்கன்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மனமகிழ் மன்றத்தின் மேலாளராக பணியாற்றி வந்த கோவையை சேர்ந்த ராமநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


