இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமனம்.. !

 
Q

அதிமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இலக்கிய அணி மாநில செயலாளர் பதவி காலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவனை, இலக்கிய அணி மாநில தலைவராக நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னையில் பழனிசாமியை சந்தித்து விசயராகவன் வாழ்த்து பெற்றார். எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு, இப்போது தான் இலக்கிய அணிக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.