நடிகர் மாரிமுத்து மரணம்.. சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும் உடல்!!

 
tn

'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  தேனி மாவட்டம் பசுமலையை சேர்ந்த மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்தார் . ராஜ்கிரன் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி , எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

tn

இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.  சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த இவர் வாலி, உதயா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

tn

இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் டப்பிங் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவரது மனைவியிடம் மருத்துவமனை செல்வதாக கூறியதுடன் தானாகவே சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார் மாரிமுத்து.  மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவரது உயிர் பிரிந்துள்ளது. நடிகர் மாரிமுத்துவின் உடல் மதியம் மூன்று மணி வரை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  பின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.