ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள்- மேலும் 3 பேர் புகார்

 
போலீஸ்க்கு தங்க கட்டிகளை வாரி வழங்கிய ஜெம் வீரமணி?- பகீர் திருப்பம்

ஜெம் வீரமணி மீது மேலும் 3 பேர் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்பு பிரிவில் பெறப்பட்ட Pendrive-ல் ஜெம் கிரணைட் தொழிலதிபர் வீரமணி என்பவர் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரது வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக Pendrive-வில் பதிவாகியிருந்த வீடியோவில் வீரமணி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற மேலும் ஒரு வீடியோவை வைத்திருந்தது தொடர்பாக அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து அண்மையில் ஜெம் கிரணைட் தொழிலபதிர் வீரமணியின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, ஜெம் கிரணைட் வீரமணியின் ஓட்டுநர் கள் 1.லாசர், 2.பார்த்திபன் மற்றும் 3.பாபு ஆகியோர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். 


இந்நிலையில் ஜெம் வீரமணி மீது மேலும் 3 பேர் புகார் அளித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. வழக்கை  மறைத்தது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. வழக்கை வெளிக்கொண்டுவந்த பெருமை போக்சோ நீதிமன்ற நீதிபதி பத்மாவையே சாரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.