மறைந்த நடிகர் மனோஜ் பாரதியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்

 
ஃப்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், தாஜ்மஹால், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து அண்மையில் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார்.

Image

இதனையடுத்து, மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் முதலில் சென்னை, சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் சேரன், இயக்குநர் ஏ.எல்.விஜய், நடிகை சோனா, நடிகர் சித்ரா லட்சுமணன், நடிகர் ரோபோ சங்கர், அவரது மனைவி, நடிகர் ராமராஜன், இயக்குநரும், நடிகருமான தியாகராஜன், இயக்குநர் ஹரி அவரது மனைவி பிரீத்தா ஹரி, கவிஞர் சினேகன், கன்னிகா சினேகன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இயக்குநர் பேரரசு, நடிகர் பொன்வண்ணன், நடிகர் ஜோ மல்லூரி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மனோஜ் பாரதி ராஜாவின் உடலானது, சேத்துப்பட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நீலாங்கரை இல்லத்தில் இயக்குநர்கள் ராம், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் இளவரசு, நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, நீலாங்கரை இல்லத்தில் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்காக கனத்த இதயத்துடன், கண்களில் சோகம் நிரம்ப காத்திருந்த இயக்குநர் பாரதிராஜாவின் கைகளை பிடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். இதனையடுத்து மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது
உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.